Thursday, January 31, 2013

எங்கே சென்றீர் எமை விடுத்து?


ந்தியத் திருநாடு இரண்டாகப் பிரிந்த நேரம். அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜின்னா இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களை அரசு விருந்தினராய் பாக்கிஸ்தான் அழைக்கிறார். அழைப்பை ஏற்று இந்தப் பெருந்தகையும் அங்கு சென்றார். விருந்தில் உணவு அருந்திக்கொண்டு இருக்கும் நேரம்.. ஜின்னா இஸ்மாயில் சாஹிபிடம் "சாஹிப்! இந்தியாவில் முஸ்லீம்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லுங்கள். உங்களுக்கு உதவ பாக்கிஸ்தான் தயாராக இருக்கிறது" என்றார். கடும் கோபம் கொண்ட சாஹிப் "நண்பர் என அழைத்தீர்கள் என்றுதான் இங்கு வந்தேன். உங்களிடம் யாசகம் கேட்க அல்ல. என்று நாங்கள் வேண்டாம் என்று எங்களைப் பிரிந்து வந்தீர்களோ அன்றே நீங்கள் எங்களுக்கு அன்னியர். எங்கள் தேசத்தில் இந்தியர்களுக்குள் பிரச்சனை என்றால் அதைத் தீர்த்துக்கொள்ள இந்தியர்களான எங்களுக்குத் தெரியும். உம் உதவி எமக்குத் தேவையில்லை. விருந்துக்கு என்று அழைத்து என்னை அவமதித்து விட்டீர்கள், எனவே இந்த விருந்தில் இருந்து வெளியேறுகிறேன்" என உடனடியாக கைகழுவி வெளிநடப்பு செய்கிறார் கண்ணியத் தென்றல்.

நேருவை நம்ப வைத்து பின்னர் கழுத்தறுத்து இந்தியாவிற்கு எதிராக சீனா போர் துவங்கிய நேரம். ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை. இந்திய இளைஞர்கள் ராணுவத்திற்குத் தேவை என்று அழைப்பு விடுக்கின்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன். அழைப்பைக் கண்ட அடுத்த நொடி தனது இளம் மகனை அழைத்துப்போய் பரங்கிமலை ராணுவ கேம்பில் ராணுவத்திற்கு சேர்த்துவிட்டுத் திரும்புகிறார் பெருந்தகை காயிதேமில்லத்.

பாராளுமன்றத்தில் இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்கும் மசோதாவின் மீதான விவாதம். தன் தாய்மொழியான தமிழின் தோற்றம், வளர்ச்சி, இலக்கண இலக்கியச் சிறப்புகள் ஆகியவற்றைத் தன் அழகுமொழியில் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்து "இந்திய துணை கண்டத்தின் ஆட்சிமொழியாக இருக்கும் தகுதியும்,உரிமையும் தன் தாய்மொழி தமிழுக்கே உண்டு" என்று முழங்கி இந்தியை தேசிய மொழியாக்கும் தீர்மானத்தைத் தோற்கடிக்கிறார் தலைவர் இஸ்மாயில் சாஹிப்.

ஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கண்ணியத் தென்றல் வெளியிட்ட அறிக்கை கருத்து குறித்து அண்ணாவிடம் பத்திரிக்கையாளர்கள் அண்ணாவின் கருத்தைக் கேட்கின்றனர். " அவரது அறிக்கையை நான் இன்னமும் படிக்கவில்லை. ஆனால் என்னிடம் இஸ்ரேல் முக்கியமா? இஸ்மாயில் முக்கியமா? என்று கேட்டால் நான் இஸ்மாயில்தான் முக்கியம் என்பேன்! எனவே அவர் எது சொல்லி இருந்தாலும் அதுதான் என் கருத்து" என்று பதிலுரைக்கிறார் அவரது ஆத்ம நண்பர் அறிஞர் அண்ணா.

--00--

பெருந்தகையே! பிறப்பால் இந்தியனாக, இனத்தால் திராவிடனாக, தாய்மொழியால் தமிழனாக, மதத்தால் முஸ்லீமாக.... இவற்றில் எது ஒன்றுக்கும் குறைவைக்காத பெருவாழ்வு வாழ்ந்தவர் நீங்கள்! நீங்கள் மறைந்து 41 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தனக்குத் தலைவனில்லாது தவிக்கிறது, தத்தளிக்கிறது நீங்கள் நேசித்த தமிழ் இஸ்லாமியச் சமூகம். தலைவன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் தன்னைத் தலைவன் என்று சொல்லிக்கொண்டு தவறான வழிகாட்டும் தற்குறிகளால் தடுமாறி நிற்கிறது நீங்கள் நேசித்த தமிழ் இஸ்லாமியச் சமூகம். இனியும் உங்களைப் போல் ஒரு தலைவன் கிடைப்பான் என்ற நம்பிக்கை எமக்கு அறவே இல்லை. இறைவனிடம் கேட்டு நீங்களே எழுந்து வாருங்கள்!!

-------------------------------------------------------------------------------------
ஆக்கம்: புதுகை அப்துல்லா 

Monday, January 14, 2013

வெள்ள ப்ரொடியூசரு

ரு நல்ல நாள் அதுவுமா அந்தத் தயாரிப்பாளரை சந்திச்சேன், சரக்கடிக்கிற இடத்துலதாங்க. நான் என்ன பண்றேன்னு சொல்லவே இல்லை. அவராத்தான் சொன்னாரு, அவரு ஒரு தொழிலதிபர் அப்படின்னும், சினிமாப் படம் ஒன்னு எடுத்துடறதுதான் அவரோட லட்சியம் அப்படின்னும் சொன்னாரு.

ஒன்னு ரெண்டு தம்ளர் இறங்கியதும், நான் பேச ஆரம்பிச்சேன். “அண்ணே, எனக்கு படம் இயக்கனும் அப்படிங்கிற ஆசையிருக்கு. நல்ல கதையா பலதும் இருக்கு. ஆனா உங்களை மாதிரி ஒரு நல்ல தயாரிப்பாளர் மட்டும் கிடைக்க மாட்டேங்குறாங்க. என்னோட விதி இப்படி கதை சொல்லித்தான் முடிஞ்சிடுமோன்னு தெரியலண்ணே” அப்படின்னு பிட்டைப் போட்டு வெச்சேன்.

என் கண்ணையே குறுகுறுன்னு பார்த்திட்டு இருந்தாரு. “ஏங்கண்ணு, என்னைப் பார்த்தா என்ன நினைக்கிறே? (சரக்கு அம்புட்டு உள்ளே போயிருக்கு)”

”சரியாத் தெரியலண்ணே! ஆனா வெள்ளை மனசுக்காரவுகளா இருக்கீங்க. இங்கே சீக்கிரமா ஏமாத்திப் புடுவாங்கண்ணே”

“கண்ணு, உன் கண்ணு கூர்மைடா, பொய் சொல்லலை. நெசமாலுமே, கதையிருந்தா சொல்லு, இப்பம் வேணாம், காலங்காத்தால வா, பேசிக்கலாம். இந்தா என் நம்பரு” அப்படின்னு சொல்லிட்டு, நான் அடிச்ச சரக்குக்கும், சைட் ட்ஷ்ஷுக்கு சேர்த்தே காசை வெச்சிட்டுப் போனாரு.

எனக்கோ நம்பிக்கையேயில்லை. உடனடியா அவரோ நம்பரை பதிஞ்சி வெச்சிக்கிட்டேன், மொபைல் கீது தொலைஞ்சு போயிட்டா, உடனே பக்கத்துல இருந்த ஒரு சிகரெட் அட்டையை எடுத்து அதுலையும் இப்படி எழுதி வெச்சிக்கிட்டேன்.

Dheivam - 98427*****

காலையில எழுந்திருச்சது 5 மணிக்கு, சுத்தமா தூக்கமேயில்லீங்க. தனியாளா நானா ஒரு முறை, ரெண்டு கதையையும் சொல்லிப் பார்த்துக்கிட்டேன். முதல்வன் அர்ஜூன் கணக்கா(கக்கா போகயிலும் கூட).

சரியா 8 மணிக்கு அவரோட வீட்டுக்கு முன்னாடி என்னோட சில்வர் ப்ளஸ் போய் நின்னுச்சு. வீட்டைப் பார்த்தா, இல்லீங், இல்லீங் அது மாளிகை, பங்களா.. வாட்ச்மேன் கேட்டாரு “என்ன தம்பி, ஐயாவை பார்க்க வந்தீங்களா? செத்த நேரம் பொறு, ஒரு அரை மணிநேரத்துல கூப்பிடுவாரு” அப்படின்னு கேட்டுலையே நிக்க வெச்சாரு.

சரியா அரைமணிநேரம் கழிச்சு, வாட்ச்மேன் உள்ளே போகச் சொன்னாரு. 6 இல்லைன்னா 7 காரு இருக்கும்ங்க. அத்தனையும், பளபளன்னு ஜொலிக்குது, வெள்ளைக்காருங்க. ஐயா, இல்லை இல்லை தெய்வம்தான் ஹால்ல உக்காந்து இருந்தாரு, ’வெள்ளையும் சொள்ளையுமா’ அப்படின்னு கேள்விப் பட்டிருப்பீங்க, ஆனா அவரு வெள்ளையோ வெள்ளையா இருந்தாரு, வீடு முழுக்க வெள்ளைதான். சோபா வெள்ளை, பூஞ்செட்டியெல்லாம் வெள்ளை. எல்லாம் வெளுப்பு.

“வா கண்ணு, தூங்குனியா” அப்படின்னு தெய்வமே கேட்க “இல்லைண்ணே, ஒரே படபடப்பாவே இருந்துச்சு”

“என்ன சாப்பிடுற?” உள்ளே திரும்பி, ”மணியா! ரெண்டு காபி கொண்டா, அப்படியே தம்பி வந்திருக்காப்ல, இட்லி பண்ணிடு” அப்படி உத்தரவு போட்டாரு. “சாப்பிடுவே இல்லை” அப்படின்னு என்னைப் பார்த்து கேட்க “என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க, சங்கோஜமா இருக்குண்ணே” அப்படின்னு நெளிய ஆரம்பிச்சேன்.

காபி ஆச்சு, கதை சொல்ல ஆரம்பிச்சேன், இட்லி ஆச்சி, மறுபடியும் இன்னொரு காபி ஆகும் போது, என்னோட முதல் கதை/திரைக்கதையை முடிச்சிருந்தேன்.

5 நிமிசம், கண்ணை மூடி உக்காந்திருந்தாரு. என்ன நினைச்சாரோ தெரியலை, மளமளன்னு எந்திருச்சு உள்ளே போனாரு. வரும்போது, கையில ஒரு வெத்தலையும் 51 ரூபாவும் வெச்சி “ஏந்திரிப்பா”ன்னாரு. எழுந்திருச்சேன், “இந்தா, படத்தோட அட்வான்ஸ், மத்தவங்க எப்படி குடுப்பாங்கன்னு தெரியாது, நம்ம குடும்பத்துல இப்படித்தான் வெத்தலை பாக்கு வெச்சி ஆரம்பிப்பாங்க” அப்படின்னு அவரு சொல்லும்போது எனக்கு தரை நழுவுற மாதிரியே இருந்துச்சு.

சடார்ன்னு தெய்வத்தோட காலுல விழுந்துட்டேன். மத்த விசயங்களைப் பேச ஆரம்பிச்சேன், இந்தக் கதைக்கு கதாநாயகனா, பெரிய ஆளைச் சொன்னேன், புது ஆளைப் போடலாம்னாரு, இப்படியே எல்லாத்துக்கும் அறிமுகத்தையே வெச்சி பண்ணிடலாம்னாரு. சரின்னு தலையை ஆட்டி வெச்சேன். கடைசியா ஒரு கொக்கிப்போட்டாரு. “50% பணம் நீ போடு கண்ணு, அப்பத்தான் படம் ஜெயிக்கனுங்கிற வெறி உனக்கு வரும். என்ன சொல்றே?”

”இல்லண்ணே, அவ்ளோ பணத்துக்கு நான் எங்கே போவேன்.”.அப்படின்னு சமாளிக்க, ஆரம்பத்துல அவரு காசு போடுறதாவும், பாதிப் படத்துக்கு மேலே நான் ஏற்பாடு பண்ணிக்கிறதாவும் முடிவாகிருச்சு. சந்தோசத்தோட கிளம்பி வந்தேன், இல்லை பறந்துட்டே வந்தேன்.

இருக்கிற நிலத்தை வெச்சிடலாம்,  கொஞ்சம் பேங்க்ல கடன் வாங்கிக்கலாம், இப்படி பலவிதமா யோசிச்சிக்கிட்டே வீட்டு வந்தா, குமரேசன் நின்னிட்டு இருந்தான். டிகிரி தோஸ்த்து.

”என்றா ஆச்சு, உம்பட போனுக்கு? எத்தனை வாட்டி கூப்பிடறேன், ஆப் பண்ணியே வெச்சிருக்க?” அப்படின்னு எகுற ஆரம்பிச்சான். அப்பத்தான் ஞாபகத்துக்கு வந்திச்சு, அட ஆமாம்ல, கதை சொல்ல ஆரம்பிச்ச போது அணைச்சி வெச்சது. சந்தோசத்தை அடக்க முடியாம நிக்கிறேன், அவனா வந்து என்னைய கட்டிப்புடிச்சிக்கிட்டான். ”மாப்ளே, ஹீரோவாகப்போறேன்டா, ஒரு ப்ரொடியூசரு படம் பண்ணலாம்னு சொல்லிட்டாரு” அப்படீங்க, “டேய், நானும் ஒரு ப்ரொடியூசரை பார்த்துட்டுதான்டா வரேன்” அப்படின்னு சொல்ல ரெண்டு பேருக்கும் தலையும் புரியல, காலும் புரியல.

அண்ணாச்சி கடையில டீ அடிச்சிட்டே சொன்னான் “முதல் 50% பணத்தை நான் போடனும்டா. நெலப்பட்டாவை ஐயன்கிட்ட கேட்டிருக்கேன். தரேன்னுட்டாரு. அப்பத்தான் ஜெயிக்கனும்ங்கிற வெறி வரும்னு சொன்னாருடா. எனக்கும் மனசுக்கு அதான் சரியாப் பட்டுச்சு. இதாப்பாரு” அப்படின்னு வாடின வெத்தலையோட 51ரூபாவை மேம்பாக்கெட்டுல இருந்து எடுத்தான்.

முடிவோட எழுந்திருச்சேன் “வெள்ளை வீட்டு ப்ரொடியூசராடா?”

”ஆமாம்டா, உனக்கு எப்படி.. இரு இரு.. உனக்கும் அவரேத்தானா. அப்ப நீதான் டைரக்டரா? டேய்ய்ய்ய்ய்”

”ஆமாம்டா அவரேத்தான், இரு இரு.. முதல் 50% உன்னோட நிலம். ரெண்டாவது 50% என்னோட நிலம். ஆமாம்டா, முதல்ல 50% அவரு பணம் போடுறாராம், ரெண்டாவது 50% நான் போடனுமாம். எப்படிஈஈ?” அவனையே பார்த்திட்டிருந்தேன்.

இப்படி முடிச்சான்

 “அப்புறம் என்ன ****க்குடா அவனுக்கு ப்ரொடியூசருன்னு பேரு *&*&^(*&^*(&^” 

படம் நன்றி: Super Goodfilms
Disc: மேலேயுள்ள கதைக்கும், நடிகர் விஜயகுமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, வெள்ளை வெளேறென்றால் இவர்தான் சரியா வருவாருங்கிறதால அவர் படம். அம்புட்டுதான்

Tuesday, January 1, 2013

குடுத்த காருக்கு மேல கூவனும் போல

  • நீபொவ -காதலிச்சவங்களுக்குத் தான் பிடிக்கும். யானையோட பழகினா கும்கி பிடிக்கலாம். அப்ப அனகோண்டா படம் பிடிக்கனும்னா????

  • குழந்தைகள் அடம்பிடிப்பது கூட அழகுதான், வேடிக்கைப் பார்க்கும்பொழுது

  • மனுச இனத்தை விருத்தி பண்ண சிட்டுக்குருவிகளை ஏண்டா கொல்றீங்க? #லேகியம்


  • Nobody is perfect = ஒரு பொணமும் சரியில்லை #மொழியாக்கம் #லபக்குதாஸ்

  • மாத‌ சாப்பாட்டு செலவுக்கு ரூ.600 போது‌ம்: ஷீலா தீட்சித் #30 நாளும் உண்ணாவிரதம் இருக்கிற குடும்பத்தைப் பத்தி சொல்றாங்கப்பா
 
  • இந்த வருட வெற்றி நாயகன் .. விஜய்... இருங்கப்பா விஜய் சேதுபதி #பீட்சா #சுந்தரபாண்டியன் #NKPK

  •  பேஸ்புக்கில் ஒரு பெண் தன் படத்தை பகிர்ந்திருந்தார் , Like போட்டுவிட்டு, “ப்ப்பாஆஅ” என்று Comment போட்டுவிட்டேன். குழம்பட்டும்
  •  இனிமே கட்சி மாறினா, குடுத்த காசு(ரு)க்கு மேல கூவனும் போல

மானாவாரி

Social கவிதை Movies பதிவர் வட்டம் 365-12 Personal twitter கிராமம் சமூகம் துணுக்ஸ் TamilmaNam Star Movie Review TeaKadaiBench USA காதல் Video Post சமுதாயம் சிபஎபா நிகழ்வுகள் பதிவுலகம் Copy-Paste Quiz அனுபவம் புலம்பல் Vivaji Updates ஈழம் News Short Film ஏரும் ஊரும் கதை ஜல்லி புனைவு மீள்பதிவு Politics பண்ணையம் Comedy cinema music அரசியல் சிறுகதை தொடர்கதை நகைச்சுவை Photo technology சங்கிலி பெற்றோர் Photos song webs இளையராஜா தமிழ் விவசாயம் Information KB Story in blogging world. experience இயற்கை நினைவுகள் ரஜினி வியாபாரம் BlogOgraphy Interview NJ NYC Songs review Tamil Kid kerala manoj paramahamsa tamil train அலுவலகம் இசை திரைப்படம் பத்திரிக்கைகள் பொங்கல் மொக்கை 18+ Adverstisement Buzz Computing Controversial Doctor Drama GVM IR Indli Job Interview Jokes Language Music Review Oscars Sevai Magik Tamil Blog awards Wish WorldFilm Xmas aggregator book review cooking corruption cricket kids nri rumour songs. sujatha அப்பா அப்பாட்டக்கர் எதிர்கவிதை கடிஜோக்ஸ் கற்பனை கலவரம் கலைஞர் குத்துப் பாட்டு குறள் சினிமா சுட்டது சுயம் திரைத்துறை நட்பு படிச்சது பயணம் பாரதி மீட்டரு/பீட்டரு விமானம் விவாஜியிஸம்