அஸ்தி

அவனை தெய்வமென்று கொண்டாடியது இந்த உலகம்,
கொண்டாட்டமெல்லாம் அவன்
உயிருடன் இருக்கும் வரைதான்
மரித்துப்போனான் அவன் - வயிற்றிலும்
வாயிலும் அடித்துக்கொண்டு அழுதது ஊர்.

மயானத்தில் எஞ்சியிருந்தது எரிந்து போன
அவனது சாம்பல்- ஆம், சாம்பல்தான்
தெய்வம் என்று கொண்டாடியதால்மட்டும்
அவனது சாம்பலொன்றும் திருநீறாகிவிடவில்லை.


ஆம்,
சாம்பல் என்றும்
திருநீறாகிவிடுவதில்லை !!!!

Comments

  1. மறக்கமுடியுமா மாபெரும் தலைவனை....

    ReplyDelete
  2. மறக்க முடியாத தலைவர்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts