புத்தம் புது காலை ஜெயிக்குது

இளையராஜா குடுத்த ஜானே தோனாதான்  (தமிழில் நூறாவது நாள் - விழியிலே, மணி விழியில்) சிறந்த Re-mix என்று சொல்வேன். அது re-Master வகையில் வந்தாலும் வரும். பால்கியின் படம்னாலே ராஜா கொஞ்சம் மெனக்கெடறது உண்டு, ஹிந்திங்கிறதனாலேயும் இருக்கலாம். இதுக்கும் பால்கி பழைய பாடலைத்தான் பெரும்பாலும் கேட்டு வாங்கிக்கிறாரு. இதை ஏன் இப்ப சொல்றேன்னா.. அலைகள் ஓய்வதில்லை படத்துல புத்தம் புது காலை பாட்டு ஒன்னு இருக்கு. வேலை பொழப்பு இல்லாம ஒரு நாள் இந்தப் படத்தை இணையத்துல புடிச்சி இந்தப் பாட்டை பார்த்துப்புடலாம்னு படத்தை பார்த்து ஓட்டி ஓட்டி பார்க்கிறேன், படத்துல அந்தப் பாட்டையே காணோம். ரொம்ப வருசமா தெரியாது அந்தப் பாட்டு படத்துல இல்லைன்னு. சுத்தம்.. இப்படி தளபதி படத்துல கூட "புத்தம் புது பூ பூத்ததோ" அப்படின்னு ஒரு பாட்டு கேசட்டுல வந்துச்சு, ஆனா படத்துல வரலை.  ராஜாவுக்கு "புது" அப்படிங்கிறது செட் ஆவலையோ என்னமோ. விடுங்க.. பழைய பஞ்சாங்கத்தையே எத்தனை நாள்தான் பொரட்டுறது.

மேகாங்கிற படத்துல "புத்தம் புது காலை" பாட்டு வருதுன்னு சொன்னவுடனே ஜானேதோனா மாதிரி புது இசை வரும்னு பார்த்தா, ராஜா சும்மானாச்சுக்கும் இருக்கட்டும்னு இடதுகையால அதே நோட்ஸ் தூக்கி போட்டிருப்பாரு போல. எனக்குத் தெரிஞ்சு ராஜா இந்தப் பாடல் பதிவுக்கே போயிருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். ஆர்கெஸ்ட்ராவுல போடுறாப்ல இருந்துச்சு, ஜானகியம்மா வாய்ஸுக்கு அனிதா வேற. எனக்கு ரெண்டுபேருமே பிடிக்குங்கிறதால நோ கமெண்ட்ஸ். பாடல் நுண்ணிய ஒலிப்பதிவு (சொல்லிக்க வேண்டியதுதான்) கேட்க புதுசா பழசாட்டமே இருந்துச்சு. இருந்தாலும் பாடல் புடிச்சது. ராஜா பாட்டுன்னாவே பழசா கேட்டாலும் புதுசாத்தான் இருக்கும். இது புதுசா இருக்கிற பழைய பாட்டு. ஒரு 50 முறை கேட்டாச்சு.

படம் வெளி வரதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாடல் வெளியீடு, இயக்குநர் ரொம்ப தெளிவா பேசினாப்ல, சட்னு தோணிச்சு "அட, இந்தப் பயபுள்ளைக்கிட்ட என்னமோ இருக்குடா". ராஜா வேற அன்னிக்கு வழக்கம் போல இல்லாம செம குஷி மூட்ல இருந்தாரு. சரி, படம் வெயிட்டு அப்படின்னு நினைச்சிட்டேன். பாடலை இன்னிக்கு காலையில பார்த்தேன், ஒரு 10 முறை தொடர்ச்சியா பார்த்திருப்பேன். அவ்ளோ அழகா படம் புடிச்சிருந்தாங்க. ஒரு பாடலைக் கேட்டு ரசிச்சா  பார்க்க படு திராபையா இருக்கும். (மெல்லினமே, சின்னத் தாமரை, இளமை என்னும் பூங்காற்று- இப்படி நிறைய கேட்டு ரசிச்சு படத்துல பார்த்தா ஏன்டா பார்த்தோம்னு இருக்கும்,. இது கேட்கவும் நல்லா இருந்துச்சு, பார்க்க செம செம செமயா இருந்துச்சு.

நினைச்சேன்டா இவன்ட என்னமோ இருக்கு, இயக்குநர் பேச்சிலேயே தெரியுது, ராஜாவும் ஒரு தெனாவெட்டா இருந்தாரு(எப்ப இல்லே?) . கண்டிப்பா சொல்றேன், படம் வெளி வந்தா இயக்குநர் பேசப்படுவார். ராஜாவுக்கு இது செம ட்ரன்டா அமையும், விசாரிச்சதுல இது ரொமான்டிக் த்ரில்லராம். சரியான டைமிங் வேற.  ஒரு பழைய பாட்டையே இப்படி எடுத்திருக்காருன்னா படம்? அதுவுமில்லாம கதாநாயகி அம்மணிக்கு இணையத்துல செம ஜொள் ஓடுது. பாட்டைப் பாருங்க. ராஜாவை துள்ளியமா ரசிக்கிறவனால மட்டும்தான் இப்படி ஒரு பாட்டை அழகாத் தர முடியும்.கெலிக்கும்டா எழுதி வெச்சிருக்கேன்!!!


பிகு: போனவாரமே வர வேண்டிய பதிவு

Comments

  1. செமத்தியாக இருக்கு இந்த பாட்டு.

    ReplyDelete
  2. நைஸ் படம் பார்க்க ஆவலை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  3. பாடல்களில் இசை ராஜாங்கம் நடத்த அவரால் முடிந்திருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular Posts